

சென்னை: வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை கிறிஸ்தவர்களுக்கு வழங்கியதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெமினி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
சபரிமலை ஐயப்பன் சேவா சமாஜம் தேசிய அறங்காவலர் துரைசங்கர், இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி.இளங்கோவன் உட்பட இந்து முன்னணி அமைப்பினர் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.