

சென்னை: திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், குறைதீர்க்கும் முகாம் சென்னை மாவட்ட சமூகநல அலுவலக வளாகத்தில் செப்.1-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமையில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, வரும் செப்.1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை மாவட்ட சமூக நல அலுவலக வளாகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் திருநங்கைகள் நேரில் வந்து, மனுக்கள் கொடுக்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.