Published : 24 Aug 2023 06:07 AM
Last Updated : 24 Aug 2023 06:07 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியக் குழுத் தலைவராக திமுக பெண் கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 கவுன்சிலர்களில் 7 பேர் அதிமுகவினர். 6 பேர் திமுகவினர். ஒருவர் சுயேச்சை. கடந்த சில மாதங்களாக ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடை பெறாததால் தீர்மானங்கள் நிறை வேறாமல் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே, நரிக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்ச வர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில், அதிமுக, திமுக கவுன் சிலர்கள் உட்பட 12 பேர் ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சவர்ணத்துக்கு எதிராகக் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து நரிக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சவர்ணத்தை தகுதி நீக்கம் செய்து ஊரக வளர்ச்சித்துறைச் செயலர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உத்தர விட்டார். இதனால், நரிக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் பதவி காலியிடமாக அறிவிக்கப்பட்டது.
ஒன்றிய துணைத் தலைவராக இருந்த அதிமுக கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைவர் பொறுப்பு வகித்து வந்தார். நரிக்குடி ஒன்றியக் குழுத் தலைவரைத் தேர்வு செய்ய ஆக. 23-ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் தலைவருக்கான தேர்தல் நேற்று நடந்தது.
தலைவர் பதவிக்கு திமுக 3-வது வார்டு கவுன்சிலர் காளீஸ்வரி வேட்புமனு தாக்கல் செய் தார், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்வானார்.
இதற்கு திமுகவைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள், அதிமுகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் என மொத்தம் 11 பேர் ஆதரவு தெரிவித்தனர். அதிமுக உறுப் பினர்கள் 3 பேர் தேர்தலில் பங் கேற்கவில்லை.
போட்டியின்றி தேர்வான காளீஸ்வரிக்கு அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரியும் ஊராட்சிகள் உதவி இயக்கு நருமான அரவிந்த் வழங்கினார். இதை திமுக நிர்வாகிகள் ஒன்றிய அலுவலகம் முன் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குடி ஒன்றியம் அதிமுக வசம் இருந்த நிலையில் தற்போது திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT