Published : 24 Aug 2023 06:07 AM
Last Updated : 24 Aug 2023 06:07 AM
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் பகுதியைச் சேர்ந்த மைதீன் பட்டாணி என்பவரது மகன் செய்யது அலி. இவர், கடையநல்லூரைச் சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் ஹோட்டல் வேலைக்கு சென்றுள்ளார். இதற்கான செலவுத் தொகை 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளனர். அங்கு சென்ற பின் 4 மாதம் மனைவிக்கு சம்பளம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், மலேசியாவில் இருந்து வாட்ஸ் அப் மூலம் தனது மனைவிக்கு வீடியோ, ஆடியோ பதிவு செய்து அனுப்பியுள்ளார். அதில், கடும் பணிச்சுமை மற்றும் கெடுபிடியில் சிக்கி தவித்து வருவதாகவும், சித்ரவதை செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, இவரது மனைவி செய்யது அலி பாத்திமா தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில், ‘எனது கணவருக்கு சரியாக சாப்பாடு கொடுக்காமல், ஊருக்கும் விடாமல் தடுத்து கொடுமைப்படுத்துகின்றனர். சம்பளமும் சரியாக கொடுப்பதில்லை. எனவே, எனது கணவரை மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT