“நம் தேசத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது” - சந்திரயான்-3 வெற்றி குறித்து திருமாவளவன்

“நம் தேசத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது” - சந்திரயான்-3 வெற்றி குறித்து திருமாவளவன்
Updated on
1 min read

சென்னை: “நம் தேசத்தின் மதிப்பு வல்லரசுகளே வியந்து பார்க்கும் வகையில் உலக அரங்கில் வெகுவாக உயர்ந்துள்ளது” என சந்திரயான் 3 வெற்றி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 ஆய்வுக் கலன் வெற்றிகரமாகத் தரை இறங்கியுள்ளது. இதனால் நம் தேசத்தின் மதிப்பு வல்லரசுகளே வியந்து பார்க்கும் வகையில் உலக அரங்கில் வெகுவாக உயர்ந்துள்ளது.

பழமைவாத மூடநம்பிக்கைகளைத் தகர்த்து, இன்றைய நமது அறிவியல் - தொழில்நுட்பத் திறன் மனிதகுலத்தின் நாகரிக வளர்ச்சியை மென்மேலும் செழுமையடைய வைத்துள்ளது என்பதை உணர்த்துகிறது. இது மகத்தான வரலாற்றுச் சாதனை. இச்சாதனையைப் படைத்துள்ள நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in