Published : 23 Aug 2023 06:01 AM
Last Updated : 23 Aug 2023 06:01 AM
சென்னை: டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2023’ விருதுகள் வழங்கும் விழா வரும் சனிக்கிழமையன்று (ஆக. 26) மாலை கோவையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வை இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், யுனைடெட் எஜீகேஷனல் அண்ட் சோஷியல் வெல்ஃபர் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் ஆற்றிவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த இரண்டாண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான இவ்விருதுகள் வழங்கும் விழா சென்னை, கோவை, மதுரை என மூன்று மண்டலங்களில் நடைபெறவுள் ளது.
கோவையில் வரும் சனிக் கிழமையன்று (ஆக. 26) மாலை 5.30 மணிக்கு சிரியன் சர்ச் சாலையி லுள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கில் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்று விருதுகளை வழங்கவுள்ளார்.
இவ்விழாவில், தமிழ்நாடு ஐஎம்ஏ முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.பழனிசாமி, ஐஎம்ஏ மதிப்புறு மாநில செயலாளர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவ்விழாவில் அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT