

சென்னை: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை அளவிடுவதற்காக அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் தேசிய தர மதிப்பீடு அங்கீகாரக் குழுவால் (நாக்)தர மதிப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக ஒரு கல்வி நிறுவனத்துக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ அந்தஸ்து அளிக்கப்படும்.
இதற்கிடையே, சென்னை பல்கலைக்கழகம் நாக் அங்கீகாரம் கோரி சமீபத்தில் விண்ணப்பித்தது. இதையடுத்து 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஆகஸ்ட் 10, 11-ம் தேதிகளில் சென்னை பல்கலைக்கழகத்தில் முழுமையாக ஆய்வு நடத்தினர். அதன் அடிப்படையில் தற்போது சென்னை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ அங்கீகாரத்தை நாக் குழு அளித்துள்ளது.
அதாவது, மொத்த தர மதிப்பீட்டு சராசரியில் நான்குக்கு 3.59 மதிப்பெண் பல்கலை.க்கு கிடைத்துள்ளது. பல்கலை,யின் சிறந்த செயல்பாடு, கட்டமைப்பு, மேம்பாடு, கல்விவளர்ச்சி உட்பட பல்வேறு சாராம்சங்களை கொண்டு இந்த அங்கீகாரம்கிடைத்துள்ளதாக சென்னை பல்கலை. தெரிவித்துள்ளது.