வன்கொடுமையால் பாதித்த இருளர் பெண்களுக்கு வீடு

வன்கொடுமையால் பாதித்த இருளர் பெண்களுக்கு வீடு
Updated on
1 min read

செங்கல்பட்டு: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இருளர் இன மக்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முயற்சியால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம் படுரில்பாலு என்பவரால் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பழங்குடியின 8 இருளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முயற்சியால் செங்கல்பட்டு மாவட்டம் காயிரம்பேடு பகுதியல் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உதவி செயற்பொறியாளர் அருண்குமார், கண்காணிப்பாளர் முருகன், சமுதாய வளர்சி அலுவலர் ஜெயபிரகாஷ்வேலு, முன்னணியின் மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் க.ஜெயந்தி, மபா.நந்தன், ஆசீர், மேத்யூ, மார்க்சிஸ்ட் கட்சியின் கூடுவாஞ்சேரி நகர செயலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in