

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டல் விடுத்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவரது பெற்றோரிடம் அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலக் கட்டுப்பாட்டு மையத்தை நேற்று காலை தொலைபேசி மூலம்தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், காலை 8 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து, மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், இதுகுறித்து ரயில்வே போலீஸார் மற்றும் பெரியமேடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீஸார், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், ரயில் நிலையத்துக்குவந்த பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர். மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வெடிகுண்டு மிரட்டல் வந்த தொலைபேசி எண் குறித்து விசாரணை நடத்தியதில், மிரட்டல் விடுத்தவர் சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனியைச் சேர்ந்த மணிகண்டன்(21) என்பதும், மனநலம்பாதிக்கப்பட்டவர் என்பதும், ஏற்கெனவே இருமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தும் தெரியவந்தது.
ஏற்கெனவே இருமுறை எச்சரித்து, அவரின் பெற்றோரிடம் எழுதிவாங்கிக் கொண்டு, அந்நபரை விடுவித்த சூழ்நிலையில், மீண்டும்அவர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, அந்த நபரை மனநல மருத்துவமனையில் உடனடியாக சேர்க்குமாறும், இனியும் இதுபோல நடைபெறாமல் பார்த்துக் கொள்ளமாறும் அவரது பெற்றோருக்கு போலீஸார் அறிவுரை கூறினர்.