

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா செப். 18-ம்தேதி விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்துமுன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் 5 முதல் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து, வழிபாடு நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தஆண்டு பாஜக சார்பில் விநாயகர்சதுர்த்தி விழாவை விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முதல்கட்ட நடை பயணம் இன்றுடன் (ஆக. 22)நிறைவடையும் நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 38 ஆயிரம்இடங்களில் 2 அடி உயர விநாயகர் சிலை மற்றும் விநாயகர் படம் வைத்து வழிபாடு நடத்தவும் பாஜகவின் ஆன்மிகப் பிரிவு திட்டமிட்டுஉள்ளது.