

கனமழை காரணமாக இன்று (டிசம்பர் 1-ம் தேதி) சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஒக்கி புயலால் அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, மாணவர்கள் நலன்கருதி மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, சேலம், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோயில், மானாமதுரை, இளையான்குடி மற்றும் திருப்புவனம் ஆகிய 5 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.