துணைவேந்தர் கவுரி பணி ஒய்வு: சென்னை பல்கலை.யை நிர்வகிக்க 4 பேர் குழு நியமனம்

துணைவேந்தர் கவுரி பணி ஒய்வு: சென்னை பல்கலை.யை நிர்வகிக்க 4 பேர் குழு நியமனம்
Updated on
1 min read

சென்னை: சென்னை பல்கலைக்கழக நிர்வாக பணிகளை கண்காணிக்க உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் 4 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி எஸ்.கவுரி நியமிக்கப்பட்டார். 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்ததையடுத்து அவர், நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து புதிய துணைவேந்தரை நியமனம் செய்வது தொடர்பான தேடல் குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தலின்படி தமிழக அரசு விரைவில் அறிவிக்கும். அதன்பின் தேடல் குழு பரிந்துரைக்கும் நபர்களில் தகுதியான ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமனம் செய்வார்.

இந்தப் பணிகள் முடியும்வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கான சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் உயர்கல்வித் துறை செயலர் ஒருங்கிணைப்பாளராகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர், சென்னை ஐஐடி பேராசிரியர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்புக் குழுவுக்கு ஒப்புதல் பெறுவதற்கான ஆட்சிமன்ற குழுக் கூட்டம் சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில் பெறப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் 4 பேர் கொண்ட குழுவுக்கு பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in