Published : 21 Aug 2023 05:25 AM
Last Updated : 21 Aug 2023 05:25 AM
சென்னை: மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். மத்திய ஆள் சேர்ப்பு முகமை சார்பில் இதற்கான தேர்வு தேசிய அளவில் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில் நடப்பாண்டு நடைபெறவுள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, சிஜிஎல் எனப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான இரண்டாம் நிலை தேர்வு அக். 25, 26, 27-ம் தேதிகளிலும், சிஎச்எஸ்எல் எனப்படும் ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி அளவிலான இரண்டாம் நிலை தேர்வு நவ. 2-ம் தேதியும், இளநிலை பொறியாளர்களுக்கான தேர்வு டிச.4-ம் தேதியும், மத்திய ஆயுதப் படைக்கான தேர்வு டிச. 22-ம் தேதியும் நடைபெறவுள்ளது.
இரண்டாம் நிலைத் தேர்வுகள் பொதுவாகவே 3 தாள்களைக் கொண்டிருக்கும். ஆன்லைன் தேர்வு என்பதால் நேர மேலாண்மை முக்கியமாகும். கூடுதல் விவரங்களுக்கு https://ssc.nic.in/ என்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளத்தை அணுகலாம் என்று துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT