Published : 19 Aug 2023 04:00 AM
Last Updated : 19 Aug 2023 04:00 AM
திருப்பூர்: ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகமான நிலையில், திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி விலை உச்சத்தில் இருந்தபோது, அறுவடை செய்த விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது.
இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகமானதால், 15 கிலோ கொண்ட ஒரு டிப்பர் தக்காளி ரூ. 400-க்கு தென்னம்பாளையம் சந்தையில் நேற்று விற்கப்பட்டது.
இது குறித்து தக்காளி மொத்த வியாபாரி எஸ்.ஆர்.எம். ரவி கூறும்போது, ‘‘தக்காளி விலை படிப்படியாக குறைந்து, ஒரு டிப்பர் தக்காளி நல்ல ரகம் ரூ. 400-க்கு விற்பனையாகிறது. கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்யப்பட்டு, வெளி சந்தையில் ரூ.40-க்கு விற்கப்படுகிறது. 2 மற்றும் 3-ம் ரக தக்காளி ஒரு டிப்பர் ரூ.200-க்கு கொள்முதல் செய்யப்பட்டு,
வெளி சந்தைகளில் கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு இங்கிருந்து தக்காளி அனுப்புவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அறுவடை தொடங்கி விட்டதால், இங்கு தக்காளி பற்றாக்குறை இல்லை. எனவே தக்காளி விலை குறைந்து விட்டது” என்றார்.
விவசாயிகள் கூறும்போது, “அனைத்து காலங்களிலும் தக்காளிக்கு நிலையான விலையும், எங்களுக்கு நஷ்டம் இல்லாமலும், விலை கிடைத்தால் போதும் என்று தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT