Published : 19 Aug 2023 06:20 AM
Last Updated : 19 Aug 2023 06:20 AM

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து எம்கேபி நகருக்கு செல்லும் 46-ஜி பேருந்தை ஓட்டுநர் தேவராஜ், நடத்துநர் பாலாஜி ஆகியோர் நேற்று முன்தினம் இயக்கினர். அவர்கள் அண்ணாநகர் பணிமனையில் இருந்து புறப்படும்போது, ப்ரீத் அனலைசர் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை.

இந்நிலையில், அண்ணா நகர் ரவுண்டானா அருகே ஓட்டுநர் பேருந்தை தாறுமாறாக ஓட்டியுள்ளார். எதிரே வந்த 2 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மீது மோதும் அளவில் பேருந்தைஇயக்கியதை பார்த்து பொதுமக்கள் அச்சம்அடைந்தனர். எனவே பேருந்தை சாலையோரம்நிறுத்தும்படி பயணிகள் வலியுறுத்தியதால் அவர் பேருந்தை சாலையோரம் நிறுத்தினார்.

இதனிடையே, போக்குவரத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் ப்ரீத் அனலைசர் சோதனை நடத்தியபோது, ஓட்டுநர் தேவராஜ், நடத்துநர் பாலாஜிஆகியோர் மது போதையில் இருப்பது தெரியவந்தது. பரிசோதனை நடந்து கொண்டிருக்கும்போதே ஓட்டுநர் தேவராஜ் தப்பியோடி விட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தமாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள், நடத்துநர் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர்.பின்னர், இருவரையும் பணியிடை நீக்கம் செய்துஉத்தரவிட்டனர். இருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘அனைத்து பணிமனைகளுக்கும் ப்ரீத் அனலைசர் கருவி வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை பணிக்கு வருவோர்அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துவதில்சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.எனினும், இது தொடர்பாக அனைத்து பணிமனைமேலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x