சென்னையில் 100 மின்சார பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னையில் 100 மின்சார பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
Updated on
1 min read

பெரம்பலூர்: பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் 500 மின்சாரபேருந்துகள் வாங்க முடிவெடுக்கப்பட்டு, முதற்கட்டமாக 100 பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்தப் பேருந்துகள் சென்னையில் பரீட்சார்த்தமுறையில் இயக்கப்பட்டு, பின்னர்படிப்படியாக பிற நகரங்களில் இயக்கப்படும்.

பொருளாதார நெருக்கடி மற்றும் மிகுந்த கடன் சூழலில்தான் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இந்நிலையில், போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்றவர்கள் மற்றும் பணிக்காலத்தில் இறந்தவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. முதல்வர் ரூ.1,500 கோடி வழங்கிய பிறகு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்டது உட்பட துறையின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷின்வாங்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை பார்த்து படிப்படியாக பல்வேறுமாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in