தி இந்து இணையதள செய்தி எதிரொலி: அண்ணா சாலையில் இருந்த பேனர் அகற்றம்

தி இந்து இணையதள செய்தி எதிரொலி: அண்ணா சாலையில் இருந்த பேனர் அகற்றம்
Updated on
1 min read

'தி இந்து' தமிழ் இணையதள செய்தியின் எதிரொலியாக சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துக்கு வெளியே உள்ள நடைமேடையை மறைத்து  வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை (டிசம்பர் 5)அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி சென்னை அண்ணாசாலையில் இருந்து மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் வரையில் அமைதிப் பேரணிக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக அண்ணா சாலையில் இருந்து சென்னை மெரினா வரையில் சாலையின் இரு புறங்களிலும் பேனர், போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று (திங்கள்கிழமை) காலை அண்ணாசாலையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துக்கு வெளியே உள்ள நடைமேடையை மறைத்து ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து 'தி இந்து' இணையதளத்தில், ஒரு பலி போதாதா?- அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் என்று செய்தி வெளியிடப்பட்டது.

செய்தி வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த பேனர் அகற்றப்பட்டது. பேனர் அகற்றப்பட்டதற்கான புகைப்படம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in