

சென்னை: தி.நகரைச் சேர்ந்த கோயில் பூசாரிஹரிஹரன்(42) என்பவர், ஜெ.தீபா மீது அண்மையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், தன் மீது அளிக்கப்பட்ட புகாருக்கு மறுப்புத் தெரிவித்த தீபா, ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில், ‘`என் மீது ஹரிஹரன் அளித்தது பொய் புகார். மேலும், சசிகலா மற்றும் அவருடன் இருப்பவர்களால் எனக்கும், எங்கள் குடும்பத்துக்கும் ஆபத்துஉள்ளது. எனவே, அவர்களிடமிருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.