

சென்னை: மாநகராட்சி அலட்சியத்தால் இருவர் உயிரிழந்ததாகவும், காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் ரிப்பன் மாளிகையை நேற்று முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 71 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மாநகராட்சி சமுதாய நல மருத்துவமனையில் பிரசவத் துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்உயிரிழந்தார். அதே போல, மாநகராட்சி மழைநீர் வடிகால் பணியின்போது ஒப்பந்தப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இவ்விரு சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சிஆணையரிடம் ஏப். 17, 24, மே 3ஆகிய தேதிகளில் புகார் அளித்தோம். ஜூன் 12-ம் தேதி ஆணையரை சந்தித்து மனு அளித்தோம். இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில், ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று மாவட்டச் செயலாளர் செல்வா கூறினார்.