Published : 18 Aug 2023 04:10 AM
Last Updated : 18 Aug 2023 04:10 AM

மதுரை மாநாட்டு திடலை பார்வையிட குவியும் வெளிமாவட்ட அதிமுகவினர்

மதுரை வலையங்குளத்தில் அதிமுக மாநாட்டு பந்தலை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையிலான நெல்லை, குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.

மதுரை: அதிமுக மாநாட்டு திடலை பார்வையிட, வெளிமாவட்ட அதிமுகவினர் மதுரையில் குவிந்து வருகின்றனர்.

மதுரை வலையங்குளம் பகுதியில் ஆக. 20-ல் அதிமுக மாநாடு நடைபெறுகிறது. கே.பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது என்பதால், மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் மாநாட்டு பந்தலில் முகாமிட்டு, பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர். மாநாடு தொடங்க இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் மதுரையில் குவிந்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் மாநாட்டு திடலுக்கு தங்கள் மாவட்ட கட்சியினரை அழைத்து வந்தவாறு உள்ளனர்.

இரவு பகலாக வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் சுற்றுலா போல் மதுரைக்கு வரும் அதிமுகவினர், மாநாட்டு திடலை பார்வையிடு கின்றனர். அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில், நெல்லை, குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாநாட்டு திடலை நேற்று பார்வையிட்டனர்.

அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் வேலாயுதம், குமரி கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றியச் செயலாளர்கள் ஜெசிம், சுதர்சன், பேரூர் செயலாளர்கள் சந்திரசேகர், தினேஷ், முத்துக்குமார், ராஜபாண்டி, மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x