

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தினமும் லாரிகளில் 600 லோடுகளுக்கு மேல் கேரளாவுக்கு கனி மவளங்கள் கடத்தப்படுகிறது. கனிமவளக் கடத்தலுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் உடந்தையாக இருக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று காலை ‘என் மண் என் மக்கள்’ நடைபயண பிரச்சாரத்தை சாமியார் மடம் சந்திப்பில் இருந்து தொடங்கினார். காட்டாத்துறையில் பாரத மாதா சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். கையில் பாஜக கொடியை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டார்.
வழி நெடுகிலும் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். மதியம் தக்கலை மணலி சந்திப்பில் நடைபயணத்தை அவர் நிறைவு செய்து அவர் பேசிய தாவது: சுதந்திரத்துக்காக பாடுபட்ட அனந்தபத்ம நாடார் போன்ற தியாகிகளின் பெயரை சரித்திர பாடபுத் தகத்தில் இடம்பெறச் செய்யாமல் திராவிட மாடல் ஆட்சி மறைத்துவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தினமும் லாரிகளில் 600 லோடுகளுக்கு மேல் கேரளாவுக்கு கனிமவளங்கள் சோதனை சாவடியைத் தாண்டி போகிறது. அதற்கு பரிசாக கேரளாவில் உள்ள இறைச்சிக்கழிவு, மற்றும் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து இங்கு கொட்டுகிறார்கள்.
அமைச்சர் உடந்தை: அமைச்சர் மனோ தங்கராஜ் கனிமவளக் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறார். 10 டயருக்கு மேல் உள்ள டாரஸ் லாரிகள் கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லக்கூடாது என கடந்த ஜூலை 23-ம் தேதி பிறப்பித்த அரசாணை க்கு, நீதிமன்றத்தில் தடைஉத்தரவு பெற்றுள்ளனர்.
செந்தில் பாலாஜியை விசாரிக்கக் கூடாது என வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடும் திமுகவினர், கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தலை தடுக்க ஏன் உச்ச நீதிமன்றம் செல்ல வில்லை. மலைகளை பெயர்த்து கேரளா வுக்கு கனிமவளங்களை கடத்துவதை மட்டுமே திமுக அரசு சாதனையாக கொண்டுள்ளது.
‘நீட்’ -ஐ வைத்து அரசியல்: நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார். கன்னியாகுமரியில் இருந்தே இந்த வெற்றி கணக்கை மக்கள் தொடங்கி வைக்கவேண்டும். கன்னியாகுமரி கிராம்பு, மார்த் தாண்டம் தேன், மட்டி வாழைப் பழம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீட்டை பிரதமர் வழங்கி குமரி மாவட்ட விவசாயிகளை ஊக்குவித்துள்ளார்.
குடியை ஊக்கப்படுத்தி தமிழகத்தை குடிகார நாடாக மாற்றி வைத்துள்ளனர். 18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்களில் மதுவுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை 19 சதவீதமாக அதிகரித்து விட்டது. முதல்வர் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறார். நீட் மூலம் தான் நரிக்குறவ மாணவர்கள் முதல் முறையாக மருத்துவராகியுள்ளனர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் இதன் மூலம் மருத்துவம் படிக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். மீனவர்களை பாஜக அரசு பாதுகாத்து வருகிறது. 2024 தேர்தல் சாமானியனுக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்குமான தேர்தல். .
பொய் பிரச்சாரம்: நாகர்கோவில் மேயர் பட்டனை அழுத்தி மிஷின் மூலம் சுதந்திரதின கொடியை ஏற்றுகிறார். தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றாமல் மதத்தை வைத்து ஓட்டு வாங்குகிறார்கள். மணிப்பூர் பிரச்சினையில் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். மணிப்பூரில் 2004-ல் காங்கிரஸ் ஆட்சியில் 60 பெண்கள் ஆடையின்றி நடந்து சென்றனர்.
2014-க்கு பிறகே அங்கு அமைதி திரும்பியது. அங்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆனால் துப்பாக்கியை பயன்படுத்தி அமைதியை உருவாக்க முடியாது. இவ்வாறு அண்ணாமலை பேசினார். மாலையில் குளச்சல் தொகுதிக் குட்பட்ட வில்லுக்குறியில் அண்ணாமலை நடைப் பயணம் சென்றார்.
அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ. வேலாயுதம், மாவட்ட பாஜக தலைவர் தர்ம ராஜ் உட்பட ஏராளமோனோர் சென்றனர்.