Published : 29 Dec 2017 09:05 AM
Last Updated : 29 Dec 2017 09:05 AM

தோல் தொழிற்சாலையில் இயந்திரம் அறுந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு: ராணிப்பேட்டை அருகே பரிதாபம்

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் இயந்திரம் அறுந்து விழுந்ததால் தந்தை, மகன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதி 2-ல் தனியாருக்கு சொந்தமான சின்னப்பா லெதர்ஸ் என்ற தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுழற்சி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சிப்காட் வ.உ.சி நகரைச் சேர்ந்த ஜெய்சங்கர் (54), அவரது மகன் அருண் (19), அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (40) ஆகியோர் நேற்று மாலை தொழிற்சாலையில் ‘வேக்கம் மிஷன்’ அருகே பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல கிலோ எடை கொண்ட இயந்திரம் அறுந்து கீழே விழுந்தது. அப்போது இயந்திரத்தின் அருகே வேலை செய்து கொண்டிருந்த ஜெய்சங்கர், அருண், ராஜேந்திரன் ஆகிய 3 தொழிலாளர்களும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரத்த வெள்ளத்தில் 3 பேர் உயிரிழந்ததைக் கண்ட தொழிலாளர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வந்து விசாரணை நடத்தினார். தோல் தொழிற்சாலையில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் காட்டுத் தீ போல் பரவியதால், 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், உறவினர்கள் அங்கு திரண்டனர். இதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x