Published : 10 Dec 2017 07:24 PM
Last Updated : 10 Dec 2017 07:24 PM

ஒற்றுமையாக வாழ்வதைதான் தமிழ், சிங்கள மக்கள் விரும்புகின்றனர்: இலங்கை திரைப்பட இயக்குநர் தகவல்

ஒற்றுமையாக வாழ்வதைதான் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களர்கள் விரும்புவதாக, அந்நாட்டு திரைப்பட இயக்குநர் பிரசன்ன வித்தனகே தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் சர்வதேச குறும்பட விழாவை நேற்று முன்தினம் அவர் தொடங்கிவைத்தார்.

அவர் அளித்த சிறப்பு பேட்டியில், ‘1992-ம் ஆண்டு எனது சினிமா வாழ்க்கை தொடங்கியது. இதுவரை 8 படங்கள் இயக்கியுள்ளேன்.

இதன்மூலமாக 26 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளேன். ‘டெத் ஆன்ட் எ புல் மூன் டே’, ‘ஆகஸ்ட் சன்’, ‘வித் யூ வித் அவுட் யூ’ ஆகிய மூன்று படங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. ஓர் அரசு பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் இனப்போர் குறித்து படம் பண்ணுவது கடினம். ஆனால், இந்த முன்று படங்களையும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் போற்றினர்.

35 ஆண்டு கால இலங்கை இனப்போர், தனிமனித வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. ஓர் இனப்போர் தனிமனித வாழ்க்கை மற்றும் சாதாரண மக்களை எப்படி பாதித்தது? போரை எப்படி எதிர்கொண்டார்கள்? என்ற உண்மையை வெளியில் கொண்டுவருவதுதான் எனது கடமை. அதைத்தான், அந்த படங்களில் செய்தேன். இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, தமிழ் படங்கள் இலங்கை இளம் இயக்குநர்களுக்கு படிக்கல்லாக உள்ளது

இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களர்கள் ஒற்றுமையாக வாழ்வதைதான் விரும்புகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள்தான் அவர்களை பிரிக்கின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x