

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கின் தீர்ப்பு குறித்து அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் கூறும்போது, ‘ஒரு வழக்கில் தண்டிக்க நினைத்தாலும், விடுதலை செய்ய நினைத்தாலும் பல காரணங்களை உருவாக்க முடியும்.
இந்தியாவின் சட்டங்கள் பல, உளுத்துப்போன பழைய சட்டங்கள். இவை உடனடியாகத் தூக்கியெறியப்பட வேண்டும் என்பதையே இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது.
பள்ளிக்குள் வைத்து பூட்டி வைக்கப்பட்டதாலேயே குழந்தை கள் 94 பேர் இறந்துள்ளனர். மாமிசத்தை தராசில் வைத்து எடை போடுவது போல அல்ல இந்த வழக்கு விசாரணை. இழந்தது விலைமதிப்பில்லாத உயிர்கள். காயமடைந்த 18 குழந்தைகளும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கிருஷ்ணா பள்ளிக்கூடம் பூமியை குடைந்து பாதாள சுரங்கத்திலோ, யாருமே எட்ட முடியாத ஆகாயத்திலோ நடக்கவில்லை. அந்த வழியாகத் தான் அதிகாரிகள் சென்று வந்துள் ளனர். அதனால், அனுமதி அளித்த அதிகாரிகள்தான் பொறுப்பு. ஆனால், அவர்கள் விடுவிக் கப்பட்டது சரியல்ல. 10 குழந்தை களுக்கு மேல் விபத்தில் இறந்தால் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
வழக்கின் தன்மையை பொறுத்து அமைச்சரையும் சேர்க்க சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் ஆள்ப வர்களுக்கும் அச்சம் ஏற்படும். உயிரிழந்த குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் என்பது அரசு இவர் களை மலிவாகப் பார்க்கிறது என்பதையே உணர்த்துகிறது’ என்றார்.