Published : 16 Aug 2023 05:45 AM
Last Updated : 16 Aug 2023 05:45 AM

சுதந்திர தின விழாவை ஒட்டி 32 கோயில்களில் சமபந்தி விருந்து: பொதுமக்களுடன் அமர்ந்து அமைச்சர்கள் உணவருந்தினர்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுடன் உணவு அருந்தினார்.

சென்னை: சுதந்திர தின விழாவை ஒட்டி இந்துசமய அறநிலையத் துறை சார்பில்சென்னையில் உள்ள 32 கோயில்களில் சமபந்தி விருந்து நேற்று நடத்தப்பட்டன. இதில் அமைச்சர்கள் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

அதன் பகுதியாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று நடைபெற்ற சமபந்தி விருந்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டுமதிய உணவு அருந்தினர். தொடர்ந்து,ஏழை மக்களுக்கு வேட்டி, சேலையைஅமைச்சர் உதயநிதி வழங்கினார்.

நிகழ்ச்சியில், சென்னை மேயர் ஆர்.பிரியா, அறநிலையத் துறைச் செயலர் கே.மணிவாசன், ஆணையர் க.வீ.முரளிதரன், கூடுதல் ஆணையர் அ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் அமைச்சர் கே.என்.நேரு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஐ.பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வடபழனி முருகன் கோயிலில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எஸ்.ரகுபதி, திருவட்டீஸ்வரன்பேட்டை, திருவட்டீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சு.முத்துசாமி, ஜார்ஜ் டவுன் காளிகாம்பாள் கோயிலில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், திருவான்மியூர் பாம்பன்சுவாமி கோயிலில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மண்ணடி, கச்சாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சைதாப்பேட்டை, காரணீஸ்வரர்கோயிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் சமபந்தி விருந்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x