

சென்னை: நாட்டின் 77-வது சுதந்திர தின விழா, சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில்மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர்மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கே.நாராயணசாமி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத் துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சு.வினீத் ஆகியோர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில், மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் ஆர்.பிரியா, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.அருணா ஆகியோரும், சென்னை, பல்லவன் இல்லத்தில் மாநகர போக்குவரத்துக் கழகமேலாண்மை இயக்குநர் க.குணசேகரன், எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கோயம்பேட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் வீட்டு வசதி வாரியதலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.
மத்திய அரசு அலுவலகங்கள்: பெரம்பூர், ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தெற்குரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், காமராஜர் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால், சென்னை, வருமானவரித் துறை வளாகத்தில் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் மற்றும் வருமான வரி தலைமை இயக்குநர் (புலனாய்வு) சுனில்மாத்தூர் தேசியக்கொடி ஏற்றினர்.
நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில், சென்னை மெட்ரோ ரயில்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக், சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் சுங்கத் துறை முதன்மை ஆணையர் ஜி.ரவீந்திரநாத், சென்னை விமான நிலையத்தில் மண்டல செயல் இயக்குநர்எஸ்.ஜி.பணிக்கர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானநிலைய இயக்குநர் சி.வி.தீபக், அயனாவரத்தில் நடைபெற்ற விழாவில் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யாமற்றும் சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் மண்டல மேலாளர் ஜி.வெங்கடரமணன், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி தலைமை அலுவலகத்தில் முதன்மை தலைமை ஆணையர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.