செல்போனில் ஆபாச படம் பரவியதால் சிதம்பரத்தில் பெண் தீக்குளித்து மரணம்

செல்போனில் ஆபாச படம் பரவியதால் சிதம்பரத்தில் பெண் தீக்குளித்து மரணம்
Updated on
1 min read

செல்போன் மூலம் ஆபாச படம் பரவியதால் சிதம்பரம் வடக்குத் தில்லை நாயகபுரம்த்தைச் சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்தார்.

சிதம்பரத்தை அடுத்த வடக்குத் தில்லை நாயகபுரத்தைச் சேர்ந்த கருணாகரன் மனைவி செல்வ ராணி(28). இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார் செல்வராணி.

இந்நிலையில் செல்வ ராணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக் கும் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அந்த பகுதியில் சிலரது செல்போனுக்கு பரிமாறப்பட்டுள்ளது.

இதையறிந்த செல்வராணி திங்கட்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் செல்வராணியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி செல்வராணி செவ்வாய்க்கிழமை இறந்தார்.

இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிவுசெய்து செல்வராணியை ஆபாசப் படம் எடுத்த நபரை தேடிவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in