Published : 03 Nov 2017 02:06 PM
Last Updated : 03 Nov 2017 02:06 PM

பலத்த மழை : சென்னை புறநகரிலும் பாதிப்பு

சென்னை புறநகர் பகுதிகளிலும் இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழந்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை நகரின் புறநகர் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம், குன்றத்ததூர், மறைமலைநகர் என பல பகுதிகளிலும் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல்லாவரம் சுற்றுவட்டார பகுதகளில் தாழ்வான

பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாம்பரத்தில் முடிச்சூர் பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது மிக மோசமாக பாதிக்கப்பட்ட முடிச்சூர் பகுதியில் இந்த முறையும்அதிகமான பாதிப்பு காணப்படுகிறது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதகளிலும் பாதிப்பு காணப்படுகிறது. அங்கு மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோலவே மறைமலை நகர், செங்கல்பட்டு உட்பட பகுதிகளிலும் மழையின் பாதிப்பு காணப்படுகிறது. கடுமையான மழையால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், பால் என அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வில்லை. எனினும் வரத்து குறைந்துள்ளதால் மழை தொடரும் பட்சத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x