

சென்னை: தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் கடந்தஒரு மாதமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. சென்னை கோயம்பேடு சந்தையில்மொத்த விலையில் கிலோ ரூ.160 வரையும், வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் கிலோ ரூ.220 வரையிலும் அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதன் விலைபடிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றுகோயம்பேடு சந்தையில் மொத்த விலையில்கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.70-க்குவிற்கப்பட்டது. வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கோயம்பேடு காய்கறி சந்தைவியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.