Published : 17 Nov 2017 09:23 AM
Last Updated : 17 Nov 2017 09:23 AM

சிறந்த சிறுகதை தொகுப்புக்கு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது: டிசம்பர் 31-க்குள் படைப்புகளை அனுப்ப வேண்டும்

சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கான நூல்கள், பரிந்துரைகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த எழுத்தாளர் ஜெயந்தனின் நினைவாக சிறந்த நூல்களுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள், மணவை செந்தமிழ் அறக்கட்டளை சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு சிறுகதை நூற்றாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜெயந்தனின் சிந்தனைக் கூடல் சார்பில், 2016-17ம் ஆண்டுகளில் முதல் பதிப்பாக வெளிவந்த ஒரு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இந்தத் தேர்வுக்காக நூல்களும், பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன. நூல்கள், பரிந்துரைகளை ‘சீராளன் ஜெயந்தன், எண்.1, ஒய். பிளாக், ராஜ் பவன், சென்னை 600022’ என்ற முகவரிக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 2016-ல் வெளியான சிறுகதைத் தொகுப்புகள் குறித்த அறிமுக ஆய்வரங்கம் டிசம்பர் முதல் வாரத்திலும், இந்த ஆண்டு வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகள் குறித்த அறிமுக ஆய்வரங்கம் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்திலும் நடைபெறும். நூல்களை அறிமுகம் செய்து கருத்துரை வழங்க விரும்புவோர், தங்கள் விருப்பத்தை seeraalan@ymail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கலாம்.

விருது வழங்கும் விழா ஜெயந்தன் நினைவு நாளான பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x