Published : 21 Nov 2017 09:00 am

Updated : 21 Nov 2017 09:19 am

 

Published : 21 Nov 2017 09:00 AM
Last Updated : 21 Nov 2017 09:19 AM

மகளின் படிப்பு விஷயத்துக்காக கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி: டிச. 10-க்குள் நாடு திரும்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு

10

மகளின் படிப்பு விஷயத்துக்காக டிசம்பர் 1 முதல் 10-ம் தேதிக்குள் வெளிநாடு சென்று வரலாம் என்று கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம், விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றதாகவும், அதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனடிப்படையில், கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் ‘லுக்-அவுட் நோட்டீஸ்’ சுற்றறிக்கையால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், தனது மகளை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்க்க உள்ளதாகவும் அதற்காக லண்டன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த 16-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் வழக்கில் நவ.20-ம் தேதிக்குள் சிபிஐ பதிலளிக்க வேண்டும். கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிப்பது ஏன் என்பது குறித்தும் சிபிஐ விளக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் 10 நாட்கள் மட்டும் வெளி நாடு செல்ல அனுமதிக்கலாம் என சிபிஐ மனு தாக்கல் செய்தது.

கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “டிசம்பர் 1 முதல் 10-ம் தேதிக்குள் வெளிநாடு சென்றுவர கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதற்குள் நாடு திரும்பாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்” என்று தீர்ப்பளித்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author