தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஆக. 12) சில இடங்களிலும், நாளை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன்மிதமான மழை பெய்யக்கூடும்.வரும் 14 முதல் 17-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமானமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 78 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

ஆக.11-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கேசிஎஸ் மில்-1, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஆகிய இடங்களில் தலா 8செ.மீ., கடலூர் மாவட்டம் மீ.மாத்தூரில் 7 செ.மீ., காட்டுமயிலூரில் 6 செ.மீ., பூந்தமல்லி, சென்னை அடையாறு, கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறைப்பட்டு, நீலகிரி மாவட்டம் பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், ஈரோடு மாவட்டம் நம்பியூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in