

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றுவருகிறது. இச்சோதனை இந்தியா முழுவதும் இன்று காலையிலிருந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், சென்னையில் உள்ள ஜெயா டிவிக்கு சொந்தமான அலுவலகங்களையும் வருமான வரித்துறையினர் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து ஒரு மூத்த வருமானத்துறை அதிகாரி தெரிவிக்கையில், ''ஆமாம், தேடும் பணிகள் நடைபெறுகின்றன. கறுப்புப் பணத்திற்கு எதிரான ஆபரேஷன்களின் ஒரு பகுதி மட்டுமே இது. தமிழ்நாடு உள்ளிட்டு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் ஒன்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அதிகாரப்பூர்வ ஐடி சோதனை நடைபெறுகிறது. மேலும் தற்போதைக்கு இதற்கு மேல் எந்தவிவரமும் அளிக்க இயலாது'' என்றார்.
ஜெயா தொலைக்காட்சி நிர்வாகம் வி.கே.சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் தற்போது சிறையில் உள்ளார்.