

சட்டசபையில் வியாழக்கிழமை நடந்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன், “நிதி வசதி இருந்ததால் தேர்தலில் சிலர் வெற்றி பெற்றனர். நிதி இல்லாததால் நாங்கள் தோற்றோம்” என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘நிதி இல்லாமலா ரூ.12 கோடியில் உங்கள் கட்சிக்கு தலைமை அலுவலகத்தை கட்டினீர்கள்’’ என்றார். அமைச்சரின் கேள்வியில் அவையில் சிரிப்பலை எழுந்தது.