Published : 27 Nov 2017 13:45 pm

Updated : 27 Nov 2017 14:23 pm

 

Published : 27 Nov 2017 01:45 PM
Last Updated : 27 Nov 2017 02:23 PM

கோவையில் அலங்கார வளைவில் மோதி இளைஞர் ரகு உயிரிழந்த விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவு மீது மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற மென் பொறியாளர் ரகு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை சின்னியம்பாளையம் அருகே ரங்கசாமி கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் ரகு என்கிற ரகுபதி (32).

அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ரகுபதி, தனது திருமணம் தொடர்பான பணிகளுக்காக சில தினங்களுக்கு முன் கோவை வந்துள்ளார்.

திருமணம் தொடர்பாக பழனியில் சிலரை பார்ப்பதற்காக ரகு,, சின்னியம்பாளையத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 2:00 மணியளிவில் புறப்பட்டார். இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பேருந்தில் பழனி செல்ல திட்டமிட்டார். அவிநாசி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே இருக்க சக்கர வாகனத்தில் சென்றபோது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு மீது மோதி, ரகு கீழே விழுந்தார். அப்போது டிப்பர் லாரி ஒன்ற அவர் மீது பயங்கரமாக மோதி ரகு உயிரிழந்தார்.

ரகுவின் மரணமும், அதற்கு காரணமான அலங்கார வளைவும் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் கோபத்துடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திக் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘கோவையில் பொறியாளர் ரகு சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அலங்கார வளைவே காரணம். சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் பேனர்கள், அலங்கார வளைவுகள் தொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறி அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயிரிழந்த ரகுவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ எனக்கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்எல்ஏ கார்த்திக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், ‘‘இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’’ எனக் கோரினார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு, வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author