உணவு பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

உணவு பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
Updated on
1 min read

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தனியார் நிறுவனம், நாடு முழுவதும் பழம், காய்கறிகள் மற்றும் கடல் உணவு பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறது.

இந்நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலை விரிவுபடுத்துவதற்காக 5 வங்கிகளில் ரூ.104 கோடி கடன் பெற்றுள்ளது. ஆனால், அந்த பணத்தை, தொழில் விரிவாக்கத்துக்கு பயன்படுத்தாமல், வேறு வகையில் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அந்த வங்கிகளுக்கு ரூ.225.15கோடி இழப்பீடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இது தொடர்பாக வங்கிகள் அளித்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து தமிழகம் முழுவதும் 15 இடங்களில் நேற்று சோதனை நடத்தியது. இரவு வரை நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in