Published : 03 Nov 2017 09:42 AM
Last Updated : 03 Nov 2017 09:42 AM

2 ஆண்டுகளுக்குப் பிறகு வேடந்தாங்கல் ஏரி நிறைந்தது

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பறவைகள் சரணாலயமாகத் திக ழும் வேடந்தாங்கல் ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது.

மதுராந்தகம் அருகே உள்ளது வேடந்தாங்கல் ஏரி. இந்த ஏரி காஞ்சிபுரம் மாவட்டத்தின் பறவைகள் சரணாலயமாக விளங்குகிறது. இந்த ஏரியில் ஆஸ்திரேலியா, பர்மா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெலிக்கன், நத்தை கொத்தி நாரை, சைபீரிய கொக்கு உட்பட ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து தங்கி இனப் பெருக்கம் செய்துவிட்டுச் செல்கின்றன. இந்தப் பறவைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் வருவதால் வேடந்தாங்கல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடமாகத் திகழ்கிறது.

தற்போது பெய்துவரும் வட கிழக்கு பருவமழை காரணமாக வளையப்புதூர் ஏரி நிரம்பி அந்த நீர், வேடந்தாங்கல் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் வேடந்தாங்கல் ஏரி நேற்று முன்தினம் இரவு முழுமையாக நிரம்பியது. உபரி நீர் ஏரிக் கோடி வழியாக வெளியேறி வருகிறது.

வனச்சரகர் ஆய்வு

வேடந்தாங்கல் ஏரி நிரம்பியதைத் தொடர்ந்து அதன் கரைகள், மதகுகள் எல்லாம் எவ்வாறு உள்ளன என்பதை வனச் சரகர் சுப்பையா நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நேற்று மாலை கணக்கெடுப்பின்படி சுமார் 11,700 பறவைகள் தற் போது இந்த சரணாலயத்தில் உள்ளன.

இந்த ஏரி கடந்த 2015-ம் ஆண்டு சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது நிரம்பியது. இரண்டாண்டுகளுக்குப் பின் தற்போது இந்த ஏரி நிரம்பியுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x