Published : 10 Aug 2023 06:29 AM
Last Updated : 10 Aug 2023 06:29 AM
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி, 2 நாள்பயணமாக இன்று திருவண்ணாமலை செல்கிறார்.
திருவண்ணாமலையில் பகல் 12.30 மணிக்கு சாதுக்கள் மற்றும் பல்வேறு ஆன்மிகக் குருக்களை சந்தித்துப் பேசுகிறார். அதன்பின், வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த இயற்கை விவசாயிகளுடன் உரையாடுகிறார். தொடர்ந்து ரமணாசிரமம் செல்லும் அவர், மாலையில் யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்துக்குச் செல்கிறார். அதன்பின், இரவில் கிரிவலம் மேற்கொள்கிறார்.
நாளை காலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்கிறார். அதன்பின் மகரிஷி வித்யாமந்திர் பள்ளிமாணவர்களுடன் உரையாடு கிறார். தொடர்ந்து, ஜவ்வாதுபழங்குடியின மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பெற் றோருடன் உரையாடுகிறார். அதன்பின், செஞ்சி கோட்டை மற்றும் வெங்கடரமணா ஆலயத்துக்குச் சென்று சென்னை திரும்புகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT