

சென்னை: உரிமம் பெறாமல் தாபாக்கள், சிறு கடைகள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் விற்போர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்குத் துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகள்படி, மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
அவ்வாறு உரிமம் ஏதும் பெறாமல் தாபாபோன்ற சிறு கடைகள் மற்றும்உரிமம் பெறாத வேறு இடத்திலும் மதுபானம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மீறி மதுபானம் விற்பனைசெய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.