கீழடி அகழாய்வில் அரிதான சுடுமண் பாம்பு தலை உருவம் கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் அரிதான சுடுமண் பாம்பு தலை உருவம் கண்டெடுப்பு
Updated on
1 min read

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை ஆகிய 2 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இதுவரை கீழடியில் 9 குழிகள் தோண்டப்பட்டன.

இங்கு ஏற்கெனவே தங்க அணிகலன், சுடுமண் காளை, ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, படிக எடைக் கல் என 200-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் ஒரு குழியில் 190 செ.மீ. ஆழத்தில் அதிகளவில் பானை ஓடுகள் கிடைத்தன. அவற்றில் கைகள் மூலம் சுடுமண்ணால் நுட்பமாகச் செய்யப்பட்ட பாம்பின் தலை உருவம் ஒன்று இருந்தது. அது 6.5 செ.மீ. நீளம், 5.4 செ.மீ. அகலம், 1.5 செ.மீ., தடிமன் கொண்டது.

பாம்பின் கண்கள், வாய்ப் பகுதி நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தது. மேலும் சொரசொரப்பான மேற்பரப்பு டன் சிவப்பு நிறம் பூசப்பட்டிருந்தது. இத்தகவலை தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in