Published : 07 Nov 2017 07:58 AM
Last Updated : 07 Nov 2017 07:58 AM

ஆறுகளை நம்பியுள்ள மக்களை பாதிக்காமல் கட்டுமான பணிகள்: முதன்மை தலைமைப் பொறியாளர் பக்தவத்சலம் வலியுறுத்தல்

இந்தியன் பில்டிங் காங்கிரஸ் சார்பில் சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித் துறை வளாகத்தில் மாற்று கட்டுமானப் பொருட்கள் மற்றும் சிறந்த கட்டு மான நடைமுறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் எம்.பக்தவத்சலம் தலைமை தாங்கிப் பேசும்போது, “ஆறுகள் பல கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவதால் அவற்றைப் பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காமல் நமது கட்டுமானங்களை உருவாக்க வேண்டும்’’ என்றார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆசிய கான்கிரீட் கட்டுமான கழகத்தின் பொதுச் செயலாளர் சிங்கப்பூரைச் சேர்ந்த டான் வீ டெக் பேசும்போது, “சிங்கப்பூரில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டபோது கட்டுமானப் பணிகளுக்காக மணலை இறக்குமதி செய்தோம். பின்னர் ஆசிய நாடுகளில் மணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனங் களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனால் எம்-சாண்ட் அதிகளவு பயன்படுத்துகிறோம்” என்றார்.

ஆசிய கான்கிரீட் கட்டுமானக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரான ஆர்.எம். கிருஷ்ணா பேசும்போது, “கட்டுமானப் பணிக்கு எம்-சாண்ட் பயன் படுத்தும்போது வேதிக்கலவை சேர்ப்பதன் மூலம் தேவையான உறுதித் தன்மையைப் பெறலாம்” என்று தெரிவித்தார். எம்.சாண்ட் தரப் பரிசோதனை குறித்து சென்னையில் உள்ள தனியார் (ஐகோமாட்) பரிசோதனைக் கூடத்தைச் சேர்ந்த சிவகுமார் பேசினார். “விரிசல் அடைந்த மற்றும் இடிந்து விழும் கட்டிடங்கள்” என்ற தலைப்பில் துணைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தியும், கட்டிடங்களின் உறுதித் தன்மையை அறிந்து கொள்ளும் முறைகள் குறித்து தமிழக அரசு கட்டிட ஆராய்ச்சி நிலைய செயற்பொறியாளர் சி.கல்யாணசுந்தரமும் பேசினர். நிறைவில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் தலைமைப் பொறியாளர் எம்.குமார் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x