தமிழகம்
சென்னை மருத்துவமனையில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அறுவை சிகிச்சை
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏ திண்டுக்கல் சி.சீனிவாசன். அவருக்கு கழுத்து பகுதியில் ஒரு கட்டி இருந்ததால் சில தினங்களாக அவதிப்பட்டு வந்தார். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்து, கட்டியை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி, நேற்று சிறிய அறுவை சிகிச்சை செய்து கட்டியை மருத்துவர்கள் அகற்றினர். சிகிச்சைக்கு பின்னர், அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்தனர்.
