Published : 03 Nov 2017 03:58 PM
Last Updated : 03 Nov 2017 03:58 PM

பேசின் பாலத்தில் ஆற்றில் விழுந்து பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர் பலி

 

பேசின் பாலத்தில் ரயில்வே பாலத்தில் சீரமைப்பு பணியில் சீரமைப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர் கூவம் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்து பலியானார். அவர் உடலைத் தேடும் பணி நடந்து வருகிறது.

சென்னை பேசின் பாலத்தில் கூவம் ஆற்றின் மீது ரயில்வே மேம்பாலம் செல்கிறது. இங்கு ரயில்வே பாதையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் மூலம் ஆட்கள் மூலம் வேலை நடக்கும், இதற்காக அக்கம் பக்கம் உள்ள ஆட்களை அழைத்து வந்து வேலையில் ஈடுபடுவர்.

நேற்று சென்னை பேசின்பாலத்தின் மீது ரயில்வே பாலத்தின் தண்டவாள பகுதிகளை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள 16 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்று மாலை இங்கு தனது தந்தையுடன் வேலை செய்து கொண்டிருந்த அன்னை சத்யா நகரைச்சேர்ந்த கமலேஷ்(19) என்ற ஒப்பந்த ஊழியர் பாலத்தின் கீழ் இறங்கி வேலை செய்யும் போது திடீரென ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார்.

அவர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டதை கவனிக்காத அவரது தந்தையும், உடன் பணியாற்றும் ஊழியர்களும் வேலை முடிந்தவுடன் கமலேஷை தேடியுள்ளனர். பின்னர் அவர் வீட்டுக்கு போயிருக்கலாம் என்று அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.

வீட்டுக்கு திரும்பிய கமலேஷின் தந்தை மகன் வீடு திரும்பாததைக் கண்டு காலையில் போலீஸில் புகார் அளித்துள்ளார். எல்லைப் பிரச்சினையை வைத்து போலீஸார் புகாரை வாங்க அலைக்கழித்ததால் மகன் தவறி விழுந்த பாலத்தின் அருகே கமலேஷின் பெற்றோர் வந்து தேடியுள்ளனர்.

அப்போது அங்கு வந்த போலீஸார் விபரம் கேட்டு அந்த எல்லை போலீஸாருக்கு தகவலளிக்க சம்பவம் பற்றி கேள்விப்பட்டு பொதுமக்கள் கூடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் கமலேஷ் உடலை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x