Published : 11 Nov 2017 11:55 AM
Last Updated : 11 Nov 2017 11:55 AM

தமிழக பேரிடர் மேலாண்மை வாரியத்தின் ட்விட்டர் பக்கம்: நெருக்கடியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வடகிழக்கு பருவமழையால் உங்கள் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பான தகவலை https://twitter.com/tnsdma என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

கடந்த வாரம், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ந்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெருமளவு பதிக்கப்பட்டன.

ஆக்கிரமிப்புகளால் நீர்வழித்தடங்கள் மூடப்பட்டு, வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்தது. இதனால், சாதாரண மழைக்கே மக்கள் தவிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தகவலல்களின் அடிப்படையில் அந்தந்த பகுதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக, நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவருகின்றன. உங்கள் பகுதி நிலவரம் குறித்தும் இப்பக்கத்தில் தகவல் பகிர்ந்து பயனடையலாம்.

கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பாதிப்பு ஏதும் ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பான தகவலை https://twitter.com/tnsdma என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பயன்பெறவும்.

நமக்கு உதவ, அவர்களுக்கு உதவுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x