

சென்னையில் வியாழன் இரவு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று கல்லூரிகளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் இன்று (நவ.3) நடைபெறவுள்ள தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைழக்கத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்வுகள் ஒத்திவைக்குப்பட்டுள்ளன.
இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரிகள் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.