Published : 07 Aug 2023 06:25 AM
Last Updated : 07 Aug 2023 06:25 AM
சென்னை: கால் இழப்பு இல்லா இந்தியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 26 நகரங்களில் வாக்கத்தான் நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6-ம் தேதி ‘உலக ரத்தநாள தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, வாஸ்குலர் சொசைட்டி ஆஃப் இந்தியா (Vascular Society of India) சார்பில் இந்தியா முழுவதும் 26 நகரங்களில் கால் இழப்பை தடுப்பதை வலியுறுத்தியும், ‘நடைப்பயிற்சி மேற்கொண்டால் மகிழ்ச்சியுடன் வாழலாம்’ என்ற முழக்கத்துடனும் வாக்கத்தான் நடைபெற்றது. டெல்லியில் நடந்த வாக்கத்தானை மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் தொடங்கி வைத்தார்.
வாஸ்குலர் சொசைட்டி ஆஃப்இந்தியாவுடன் சென்னை வாஸ்குலர் வெல்ஃபர் சொசைட்டி (Chennai Vascular Welfare Society) இணைந்து சென்னை சேத்துப்பட்டில் உள்ளசுற்றுச்சூழல் பூங்காவில் வாக்கத்தான் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் வாக்கத்தானை தொடங்கி வைத்தார்.
சென்னை வாஸ்குலர் வெல்ஃபர்சொசைட்டி தலைவர் மருத்துவர் ராஜராஜன் வெங்கடேசன், சென்னை ஹைடெக் டயக்னோஸ்டிக் மைய தலைமை செயல் அதிகாரி மருத்துவர் கணேசன், திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ரத்தநாள அறுவை சிகிச்சை உட்படபல்துறை மருத்துவர்கள், செவிலியர், பொதுமக்கள் ஏராளமானோர் வாக்கத்தானில் பங்கேற்றனர்.
சென்னை வாஸ்குலர் வெல்ஃபர்சொசைட்டி தலைவர் மருத்துவர்ராஜராஜன் வெங்கடேசன் கூறுகையில், ``ரத்தக்குழாய் அடைப்பு, புகைப்பிடித்தல், சர்க்கரை நோய்,விபத்து போன்றவற்றால் ஏராளமானோருக்கு கால் இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் கால் இழப்பைத் தடுக்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நடைப்பயிற்சி மேற்கொண்டால் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற முழக்கத்துடன் வாக்கத்தான் நடைபெற்றது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT