தமிழகத்தில் வெப்பநிலை 102 டிகிரி வரை உயரும்

தமிழகத்தில் வெப்பநிலை 102 டிகிரி வரை உயரும்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். சில இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும்.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிகளில் வரும் 8-ம் தேதி வரை அதிகபட்சமாக 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in