Published : 13 Nov 2017 02:32 PM
Last Updated : 13 Nov 2017 02:32 PM

பர்கூர் மலைப்பகுதியில் குடிசையில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள்: திறப்பு விழா காணாத புதிய கட்டிடங்கள்

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள பட்டேபாளையம் மற்றும் கொங்காடை எஸ்.டி.காலனி பகுதிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு, கட்டப்பட்ட கட்டிடங்கள் திறக்கப்படாததால், பாதுகாப்பற்ற முறையில் குடிசைகளில் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரம் பா்கூர் மலைப்பகுதியில் கொங்காடை, பெரியூர், கோயில் நத்தம், பட்டேபாளையம், ஆலசொப்பனட்டி, தம்புரெட்டி உள்ளிட்ட 12 இடங்களில் கடந்த 2014-ம் ஆண்டு அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மையங்களிலும் சரா சரியாக 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மையங்களில் பலவற்றிற்கு பொறுப் பாளர்கள் நியமிக்கப்படவில்லை. இது தொடர்பாக தொடர் செய்திகள் வெளியான நிலையில், 12 அங்கன்வாடி மையங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.அதே நேரத்தில், பட்டே பாளையம், கொங்காடை எஸ்.டி.காலனி உள்ளிட்ட பல இடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்காக, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை திறக்கப்படாமல் உள்ளதால், பாதுகாப்பற்ற கட்டிடங்களில் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் செ.நடராஜ் கூறும்போது, புதிய கட்டிடங்களின் கட்டுமானப்பணி முடிந்து பல மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. குறிப்பாக, பட்டேபாளையம் மற்றும் கொங்காடை எஸ்.டி.காலனி பகுதிகளில் தலா 25 குழந்தைகள் மையங்களில் சேர்ந்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பற்ற குடிசைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை பெய்து வருவதால், இந்த மையங்களில், உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, புதிய கட்டிடங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x