

சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய மாநகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், மேம்பாலங்கள்மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் இப்பேருந்துகளின் சேவை 2008-ம் ஆண்டு நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், வாய்ப்புள்ள இடங்களில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சென்னைமற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் சேவையைக் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்யப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த டபுள் டெக்கர் பேருந்துகளின் சோதனை ஓட்டம் சென்னையில் நடந்து வருகிறது. காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் மின்சார டபுள் டெக்கர்பேருந்து சோதனை நடைபெற்று வருகிறது.