Published : 25 Nov 2017 09:20 am

Updated : 25 Nov 2017 09:20 am

 

Published : 25 Nov 2017 09:20 AM
Last Updated : 25 Nov 2017 09:20 AM

மலேசிய தமிழ் ஆர்வலர் ரூ.1 கோடி நன்கொடை

1

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்குவதற்காக மலேசிய வாழ் தமிழ் ஆர்வலர் தான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.

உலகளவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்குவதற்கான முயற்சி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த முயற்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹார்வர்டு தமிழ் இருக்கை குழுவின் கோரிக்கையின்படி, தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி அளித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் வழங்கினார். இந்த குழுவின் தொடர் முயற்சியால் பல்வேறு தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் தமிழ் இருக்கைக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மலேசியா நாட்டில் வாழும் தமிழ் ஆர்வலர் தான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரத்தை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழுவினர் கோலாலம்பூரில் கடந்த 22-ம் தேதி சந்தித்தனர். அப்போது, ஹார்வர்டில் தமிழ் இருக்கை தொடங்க ஒரு லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (ரூ.1 கோடி) காசோலையை தமிழ் இருக்கைக் குழு உறுப்பினர் ஆறுமுகத்திடம் சோமசுந்தரம் வழங்கினார். இந்தச் சந்திப்பின்போது, டத்தோ சகாதேவன், டத்தோ ராஜ் சோமசுந்தரம், மலேசியப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் கிருஷ்ணன் மணியன், சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் ஒப்பிலா மதிவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மலேசியாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக செயலாற்றி வரும் சோமசுந்தரம் கோலாலம்பூரில் உள்ள தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

வைகைச்செல்வன் நிதி

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்குவதற்கு தமிழக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கி உள்ளார்.

வைகைச்செல்வன் தனது ஒரு வருட சட்டப்பேரவை உறுப்பினர் ஓய்வூதியத் தொகையான ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்தை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழுவின் வங்கிக் கணக்கில் நேற்று முன்தினம் செலுத்தினார். இதையடுத்து, தமிழ் இருக்கைக் குழுவின் உறுப்பினர் ஆறுமுகம் வைகைச்செல்வனை நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author